அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு நேர்ந்த பரிதாபம்! நகர மக்களின் அதிரடி

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சொந்தமான கட்டடங்களிலிருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்படவுள்ளது.

அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சிலவற்றில் இருந்து ட்ரம்பின் பெயரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நகர மக்களின் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதி மக்களால் இணையத்தள மனுக்களில் கையொப்பமிடப்பட்டுள்ளது. அதற்காக கிட்டத்தட்ட 600 கையொப்பங்கள் கிடைத்துள்ளன.

அந்தக் கட்டடங்களில் இருந்து ட்ரம்ப்பின் பெயரை நீக்குவதோடு, அங்குள்ள வீதிகளில் உள்ள பெயர்களை கட்டடங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

ட்ரம்ப் பெண்களை மதிக்கும் முறை, அவரது இனவாத செயறப்பாடுகள், குடியேறுபவர்களுக்கு எதிரான கொள்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.