பாராளுமன்ற விவாதத்தில் அனல் பறக்கும் மஹிந்தவின் கருத்து?

இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனையில் வௌிநாட்டவர்களுக்கு சலுகைகளை வழங்கி உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வௌிநாட்டவர்களுக்கான வரிகளை நீக்கி அவர்களை ஊக்குவித்து, வசதியான முறையில் நாட்டில் இடங்களை கொள்வனவு செய்யவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இடமளித்துள்ளதோடு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிப்படைய செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வருமான வரியை 12 வீதத்தில் இருந்து 28 வீதமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், 85 வீதமான மக்களிடம் இருந்து மறைமுக வரிகளை அறவிட எதிர்பார்த்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படும் 2 மணி நேர கால அவகாசத்தில், தங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று மகிந்த தரப்பு குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்றைய விவாதத்தின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன் ஊடாக மகிந்த ஆதரவு அணியின் கருத்துக்கள் மக்கள் மத்தில் செல்வது தடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.