ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் எவ்வளவு வரி தெரியுமா?

வங்கிகளில் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்பவர்கள் கட்டாயம் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அப்படி டெபாசிட் செய்பவர்கள் 10 சதவீதம் மற்றும் 200 சதவீதம் வரியாக கட்ட வேண்டும்.

கருப்பு ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு நபருக்கு ரூ.4000 வரை மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புது ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகிறது. அதற்கு அதிகாமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்து பின்னர் எடுத்துக் கொள்ளலாம்.

அதோடு தனிநபர் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய எந்த ஆவணங்களும் தேவையில்லை. ரூ.2.5 லடசத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கு கட்டாயம் ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். அப்படி ஆவணங்கள் இல்லாமல் போனால் அது முறைகேடான பணமாக கருதப்படும்.

அந்த முறைகேடான பணத்துக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும். மேலும் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யும் பணத்துக்கு 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 1478939710-784