பிரித்தானிய நாட்டின் பிரதமராக ஒபாமா வருவாரா? மீண்டும் உலகத்தின் பார்வையை தன் மீது ஈர்க்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் பலத்த எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா தனது பதவி காலம் முடிவடைந்த பிறகு பிரித்தானிய நாட்டில் குடியேறி பிரதமர் பதவி வகிக்க வேண்டும் என அந்நாட்டு குடிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த விடயமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் மீண்டும் ஒபாமா பக்கம் திருப்பியுள்ளது.

மேலும், அமெரிக்காவில் ஒபாமாவிற்கு பதவி காலம் முடிவடைவதால் அவர் பிரித்தானிய நாட்டில் குடியேறி பிரதமராக வேண்டும்’ என சிலர் பதிவு வெளியிட்டுள்ளனர்.

‘ஒபாமாவை பிரித்தானிய நாட்டிற்கு கொண்டு வர அனைவரும் கையெழுத்து மனுவை தொடங்கலாமா?’ என சிலர் ஆலோசனை கேட்டுள்ளனர்.

’பிரித்தானிய நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவால் முடியும் எனவும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் என்ன மாற்றங்கள் நிகழ போகின்றது ? அப்படி ஒபாமாவிற்கு பிரதமராக பிரித்தானிய அனுமதிக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.