நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழ் மக்களுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விவாத்த்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு சமாதிகள் கட்டவும் நினைவு அஞ்சலி செலுத்தவும் சிங்கள மக்களுக்கு உரிமை காணப்படும் நிலையில், தமிழ் மக்களுக்கு ஏன் மாவீரர்களை நினைவு கூறுவதற்கு உரிமை இல்லையா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

கார்த்திகை மாதத்தில் மாவீரர்களையும் போரில் உயிரிழந்த மக்களையும் நினைத்து எமது அஞ்சலியையும் வணக்கத்தையும் சபையில் தெரிவிக்கிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உயிரிழந்தவர்களின் கல்லறைகளை அழிப்பவர்கள் கௌரவமானவர்கள் அல்ல. ஆனால் கடந்த ஆட்சியில் எமது மாவீர்களின் கல்லறைகள் புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டன.

கார்த்திகை மாதம் தமிழர்களின் விரத மாதம். எமக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைகூர்ந்து அச்சலி செலுத்தும் மாதம் இம்மாதம்.

நாம் மாவீர்களை நினைவுகூர்ந்தால் இராணுவத்தினரின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கல்லறை கட்டவும், அஞ்சலிகளைச் செலுத்தவும் எமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கு கல்லறை கட்டவும் எமக்கு உரிமை இல்லையா?

தமிழ் மக்களின் பிரச்சினகளுக்கு தீர்வு காணாது பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவோ பொருளாதாரத்தை விருத்திசெய்யவோ முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் குறிப்பிட்டார்.