இலங்கையில் குட்டி சங்ககாரா! தனி ஒருவனாக கலக்கிய சிறுவன்!

இலங்கையில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாருஜன் என்ற வீரர் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அசத்தியுள்ளார்.

கரந்தெனியாவில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான டிவிஷன் 1 கிரிக்கெட் போட்டியில் st benedict’s கல்லூரி அணியும், karandeniya central அணியும் மோதின.

இதில், st benedict’s அணி karandeniya central அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.

ஆட்டத்தில் st benedict’s அணி 85 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியபோது சாருஜன் அணியை சரிவிலிருந்து மீட்டார்.

சிறப்பாக விளையாடிய சாருஜன் 6 பவுண்டரிகளை விளாசி 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்நார்.

சாருஜனக்கு ஆதரவாக 10 நிலையில் களமிறங்கிய Niduk Fernando 21 ஓட்டங்கள் எடுத்து உதவியாக திகழ்ந்தார். இருவரும் கூட்டாக இணைந்து 50 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியுள்ளனர்.