கணவன், மகன் முன் மார்பகத்தை காட்டிய தாய். இதுதான் விழிப்புணர்ச்சியாம்

பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது ஒருவருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வாரம் என்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு தாய், படுக்கையில் படுத்து கொண்டே தனது நான்கு வயது மகனுக்கு தாய்ப்பால் கொடுப்பது போலவும், அருகில் அவரது கணவர் தூங்குவது போலவும் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

கணவன், மகன் மற்றும் தனது மார்பகம் இந்த புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது அருவருப்பான விஷயம் இல்லை என்றும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த புகைப்படத்தை பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.