இறைவனை பூஜிப்பதற்கு எந்த எந்த பூக்களை பயன்படுத்த கூடாது?

இறைவனை பூஜிக்க எந்த நேரமும் உகந்தது தான். இறைவனை வேண்டி ஒரு செயலை தொடங்கினால் அனைத்தும் வெற்றியாகவே அமையும்.

வேண்டியவை அனைத்தும் வேண்டிய நேரத்தில் தருபவர் தான் இறைவன். நாம் கேட்டதை தரும் இறைவனுக்கு எந்த வகையான பூக்களை வைத்து பூஜிக்க கூடாது என்று தெரியுமா?

விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.சிவனுக்கு தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம்.

விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. இறைவனுக்கு உகந்த மலர்களை கொண்டு பூஜை செய்து இறைவனின் அருளை பெறுவோம்…….!