யுவதிக்கு நேர்ந்த அவலம்! மூடநம்பிக்கையின் உச்சகட்டம் – அதிர்ச்சி காணொளி!!

மூட நம்பிக்கைகள் என்ற பெயரில் அன்றாடம் பல கொடுமைகள் நடைபெற்று கொண்டே இருக்கின்றது. இலங்கையிலும் போலிச் சாமியார்களுக்கு பஞ்சமில்லை.

பேயை விரட்டுகின்றேன் என்ற பெயரில் ஒரு இளம்பெண்னை நாயைப்போன்று நடத்தும் காணொளி தற்போது வைரலாகி உள்ளது. குறித்த காணொளியில் யுவதி ஒருவருக்கு நிலத்தில் இருக்கும் நீரை நாயை போன்று அருந்த உத்தரவிடப்படுகின்றது.

இவ்வாறான செயல்கள் மதங்களிடையேயும் மக்களிடையேயும் நம்பிக்கை இருந்தாலும் அதன் மூலம் மக்களை ஏமாற்றிப்பிழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவே தவிர ஏமாற்றுவதற்காக அல்ல.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படா விட்டால் இவ்வாறான செயல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் மட்டும் எவ்வித ஐயமும் இல்லை.