விபசாரி என்று திட்டியதால் நடந்த கொலை ஆயிரம் விளக்கில் பெண்…

விபசாரி என்று திட்டியதால் ஆயிரம் விளக்கில் பெண்ணை எரித்துக்கொன்றதாக கைதான மற்றொரு பெண் தகவல் அளித்துள்ளார்.

காதலனுடன் பெண் கைது

சென்னை ஆயிரம் விளக்கு மங்கீஸ் கார்டன் குடிசை பகுதியை சேர்ந்த தனலட்சுமியை (வயது 48) எரித்துக் கொன்றதாக அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண் சுகந்தி(34) மற்றும் அவருடைய காதலன் யுவனை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

தனலட்சுமியை ஏன் கொடூரமாக எரித்துக்கொலை செய்தேன் என்பதற்கு குறித்து போலீசாரிடம் அளித்துள்ள தகவல் வருமாறு.

என்னுடைய கணவரை பிரிந்து தனியாக தனலட்சுமி வீட்டில் குடியிருந்து வந்தேன். எனக்கு வேறு தொழில் தெரியாததால் விபசார தொழில் செய்து வந்தேன். பல ஆண்கள் என்னை தேடி தினமும் வருவார்கள்.

இதனால் தனலட்சுமி என்னை விபசாரி என்றுக் கூறி வீட்டை காலி செய்யும்படி கூறி வந்தார். இது எனது மனதுக்குள் கொலைவெறியை ஏற்படுத்தியது.

திட்டமிட்டு கொலை

தனலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தேன். தண்ணீர் கேன் போடும் யுவன் (26) என்பவர் என்னிடம் நீண்ட நாட்களாக பழக்கத்தில் இருந்து வந்தார். விபசார தொழில் செய்தாலும், அவர் எனக்கு காதலராக இருந்தார்.

அவருடன் சேர்ந்து தனலட்சுமியை திட்டமிட்டு கொலை செய்தேன். உடல் அடையாளம் தெரியாமல் இருக்க எரித்தோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.