திருமணமான ஒரு மணி நேரத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய பெண்

தமிழக அரசு தேர்வுத்துறையின் குரூப் 4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதினர்.

இந்நிலையில் நேற்று விழுப்புரத்தை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்ற பி.இ.பட்டதாரியும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நேற்று அவருடைய திருமணம் காலை நடந்தது.

திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையிடம் தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறினார். உடனே மாப்பிள்ளையே காரை எடுத்து கொண்டு தேர்வு அறை வரை கொண்டு வந்துவிட்டார்.

தேர்வு அறையில் மணக்கோலத்துடன் ஒரு பெண் தேர்வு எழுத வந்த சம்பவத்தை அந்த பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அகிலாண்டேஸ்வரி குரூப் 4 தேர்வை சிறப்பாக எழுதியதாகவும், தனக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கூறினார்.