புலியுடன் விளையாடிய கார் பந்தய வீரனுக்கு நடந்ததை…? நீங்களே பாருங்கள்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன். இவர் சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் முதலிடம் பெற்றவர்.

போட்டியை முடித்து விட்டு, அந்நாட்டில் உள்ள வன விலங்கு பூங்காவிற்கு சென்றார். அங்கு ஒரு பெண் புலி இருந்தது. பயப்படாமல் அதனிடம் அவர் சென்று விளையாட ஆரம்பித்தார். அந்த புலியும் அவரை தாக்கமல், அவருடன் நாய்க்குட்டி போல் விளையாட ஆரம்பித்தது.

அவரின் மீது காலை தூக்கி போட்டும் அவரின் விரல்களை கடிப்பது போல பாவனை செய்தும் அந்த புலி அவருடன் ஜாலியாக விளையாடியது. இந்த வீடியோவை ஹாமில்டன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.