உட்கார, நடக்க பயிற்சி செய்யும் ஜெயலலிதா! விரைவில் வீடு திரும்புகிறார்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து உட்கார, நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் அவர் விரைவில் மருத்துவமனையிகிருந்து வீடு திரும்புவார் என அப்பலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலகுறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு விதமான பிரார்த்தனைகள், பூஜைகள் செய்து வருகிறார்கள்.

லண்டர் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவ குழுவினரின் சிகிச்சை, சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வருக்கு தற்போது எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு பயிற்சி அளிக்க பட்டுவருகிறது. அவரது உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை கண்டு மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் முதல்வர் ஜெயலலிதா மிக விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அப்பலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.