விக்னேஸ்வரனை முதல்வராக தெரிவு செய்தது மிகப்பொருத்தமான முடிவு-இரா.சம்பந்தன்!

முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தது

மிகப்பொருத்தமான முடிவு என்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நீதியரசர் விக்கினேஸ்வரனை தெரிவு செய்தமை மிகச் சரியான முடிவு என்றும் அது இன்றும் உணரப்படுகிறது என்றும் சம்பந்தன் கூறினார்.

இதேவேளை தமிழ்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்த இரா. சம்பந்தன் அதற்கு அனைவரும் ஒத்துளைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி . விக்கினேஸ்வரன், கூட்டமைப்பை சிதைக்கும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை என்றும் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அவ்வாறு பேசி தங்கள் நலனை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றன என்றும் தெரிவித்தார்.

இதனை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் முன்னிலையில் இதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி . விக்கினேஸ்வரன் மேலும் அங்கு தெரிவித்தார்.