இந்தியாவில் பெண்ணை ஆணாக மாற்றிய ஆபரேஷன் வெற்றி

குரோமசோம்களின் குளறுபடியால் ஆண் உடலில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை பெண்பிறவிகளாகவும், பெண்ணின் உடலமைப்பில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை ஆண்பிறவிகளாகவும் கருதிக் கொள்வதுண்டு.

இத்தகைய பாலினத்தவர் தாங்கள் விரும்பும் வகையில் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளன.

மிகவும் ஆபத்தான இந்த அறுவை சிகிச்சை பல படிநிலைகளில் நடத்தப்பட வேண்டிய வெவ்வேறு அறுவை சிகிச்சைகளை உள்ளடக்கியதாக இருப்பதால் இதற்கு பலர் முன்வருவதில்லை. மேலும், இந்தியாவில் இதைப்போன்ற சிகிச்சை முறைக்கான வசதிகளும் பரவலாக இல்லை.

இந்நிலையில், குரோமசோம்களின் குளறுபடியால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரை சேர்ந்த 21 வயது இளம்பெண், தன்னை முழுமையான ஆணாக மாற்றிக்கொள்ள விரும்பினார். மகளின் இந்த ஆசைக்கு அவரது தாயார் தடை விதிக்கவில்லை என்பதுடன் அவருக்கு ஆதரவாகவும் இருந்து வந்துள்ளார்.

முதல்கட்ட சிகிச்சையாக, கடந்த ஜனவரி மாதம் அவரது மார்பகங்கள் இரண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. பின்னர், மற்றொரு ஆபரேஷன் மூலம் கருப்பாதையும், கருப்பையும் நீக்கப்பட்டன.

அடுத்தகட்டமாக, அவரது உடலில் ’டெஸ்ட்டஸ்ட்ரோன்’ எனப்படும் ஆண்மை சுரப்பிக்கான ஹார்மோன்களை ஊக்குவிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இத்தனை சிகிச்சைகளையும் மனவலிமையுடன் எதிர்கொண்ட அவருக்கு சமீபத்தில் ஆணுறுப்பை அமைப்பதற்கான ஆபத்தான, அதிநவீன அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக, இதற்காக அவரது முழங்கையின் ஒருபகுதியில் இருந்து தசை வெட்டி எடுக்கப்பட்டு, ஆணுறுப்புடன் சிறுநீர் பாதையும் வடிவமைக்கப்பட்டு, அடிவயிற்றில் பொருத்தப்பட்டது.

sur-styvpf

பின்னர், அதே முழங்கை பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த அணுக்கள் அந்த உறுப்புக்குள் செலுத்தப்பட்டது. இதன்மூலம் இந்த பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முழுஅளவில் வெற்றி பெற்றுள்ளது.

மிகவும் சிக்கலான இந்த சிகிச்சை முறையைப்பற்றி, மும்பையில் உள்ள ‘ஃபோர்டிஸ் எஸ்.எல். ரஹேஜா’ ஆஸ்பத்திரியின் மாற்றுறுப்பு மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பராக் டெலாங் கூறுகையில், ‘இந்த சிகிச்சையின் இறுதிகட்டமாக ஆணுறுப்பின் எழுச்சிக்கு தேவையான ‘செயற்கை பம்ப்’ ஒன்று இன்னும் 2-3 மாதங்களில் அவரது உடலில் பொருத்தப்படவுள்ளது, அதன்பின்னர், இந்த ‘வாலிபர்’ தனது புதிய உடல் மற்றும் புது பாலின அடையாளத்தை கண்டு மகிழ்ச்சியடைவார்’ என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.