இளவாலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!

பூட்டிய அறை ஒன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலமொன்று, இளவாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம்,அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.