ஒரே ஒரு எழுத்து மாறியதால்…தூக்கில் தொங்கிய மனைவி..!?

வித்யா .மஞ்சுநாத் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை..! காரணம் சிறு வயது முதலே புஷ்டியான உடம்பு வித்யாவிற்கு.. இன்னொரு காரணம் மரபு ரீதியான கோளாறும் உண்டு.

தவிர பார்க்கும் உறவினர்கள் எல்லாம் பூசணிக்காய்  மாதிரி இந்த உடம்பு எதற்கு என   மாறி மாறி சொல்லிக் கொண்டே இருந்தனர்.

கணவனும் அவ்வபோது கிண்டல் பண்ணிக் கொண்டே இருந்தான்..! திருமணம் போன்ற விஷேசங்களுக்கு செல்லும் போதும் இடுப்பு டயரை குறைத்தால் தான் உனக்கு குழந்தை என்று  கூற மனம் வெறுத்துப் போய் இருந்தாள் வித்யா.

அன்று அவளுக்கு பிறந்த நாள். கணவன் தனது முகநூளில் மனைக்கு பிறந்த நாள் போஸ்ட் போட்டு அசத்தலாம் என்று முடிவு செய்தான்.

அங்குதான் அவனுக்கு சனி பிடித்தது.ஆபீஸ் போனான் தனது  போனை எடுத்தான். பேஸ்புக் லாக் இன் செய்தான். மனைவியின் போட்டோவை தேடினான்.

பச்சைக் கலரில் புடவை கட்டிய போட்டோவை போட்டான் ‘டியர்’ வித்யா ஹாப்பி பெர்த்டே என்று பதிவிட்டான்..இங்கு ஒரு கொடுமை கும்மி அடித்தது டியர் என்று போடுவதற்கு பதிலாக டயர் வித்யா என்று மாறியது ஒரு எழுத்து ..!

போனை பாக்கெட்டில் வைத்து விட்டு வேலைகளில் மூழ்கிப் போனான்..! மதியம் போனை  எடுத்தான். மனைவி பிறந்த நாளுக்கு போஸ்ட் போட்டோமே எத்தனை லைக்ஸ் வந்துள்ளது என்று பார்க்க தூக்கி வாரிப்  போட்டது…!

டயர் வித்யா என்று இருந்ததால் மனைவிக்கு போன் செய்து மன்னிப்பு கேட்கலாம் என்று போன் செய்ய மனைவி போனை எடுக்கவே இல்லை. அடித்துப் பிடித்து வீட்டிற்கு ஓடினான். கதவு உட்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.

கதவை உடைத்து உள்ளே ஓடினான். கடிதம் எழுதி வைத்திருந்தாள்..! நீங்களுமா..? டயர் என்று கூற வேண்டும்  வாழப் பிடிக்கவில்லை செத்துப் போகிறேன் …!!

வித்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்..!!