இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

புதுடெல்லியின் நெய்தாவில் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் விசேட உரையொன்றை ஜனாதிபதி ஆற்ற உள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

நாளை முதல் 12ம் திகதி வரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதியுடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவும் இணைந்து கொள்ள உள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜிதவும் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.