சுன்னாகம் பகுதியில் சற்று முன்னர் அசாதாரண சூழ்நிலை : மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வேன் கடத்தல்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் சற்றுமுன்னர் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் ஒன்று பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வெள்ளை வேன் கடத்தலில் மூன்று பேர் ஈடுப்பட்டுள்ளதாகவும் இருவர் பிடிப்பட்ட நிலையில் ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிடிப்பட்ட இருவரையும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

எனினும் வெள்ளை வேன் கடத்தலில் ஈடுப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளதால் சுன்னாகம் மருதனார்மடம் பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

உடுவில் பகுதியில் வைத்து DIG யினர் ஆவா குழு உறுப்பினரை சேர்ந்தவர் என கூறிப்பிட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் மருதனார்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் வழியில் அவரின் சகோதரனால் பாதையை மறித்து DIG யினருக்கு இடையூறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சகோதரர் சுன்னாகம் பொலிஸில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசரணைகள் பொலிஸாரினால் முன்பொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.