சிக்ஸ் பேக் மோகமும் ஆபத்தான உண்மைகளும்

ஆனால் அதற்குமுன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது…

‘சிக்ஸ் பேக்’ வைத்துக்கொள்ள முயல்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை 9 சதவீதம் அளவுக்கும், நீர் அளவை 40 சதவீதம் அளவுக்கும் குறைத்தே ஆக வேண்டும்.

மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகம்.

அதிக அளவு உடற்பயிற்சி செய்வதால், உடலின் வெப்பம் அதிகரிக்கும்.

மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்கத்துக்கு உள்ளாக நேரிடலாம்.

தலைமுடி உதிர்தல், மலச்சிக்கல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சிக்ஸ் பேக்கை பாதியிலேயே நிறுத்துபவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

நம் உடலுக்கு ஏற்ற வகையில் இல்லாமல், அதிக அளவு எடை தூக்குவதால் கால்கள், இடுப்புகளில் உள்ள தசைகளில் வலி ஏற்படும். தொடர்ந்து இதுபோன்று செய்பவர்களுக்கு இந்த வலி நிரந்தரமாகலாம்.

எனவே, ‘சிக்ஸ் பேக்’குக்கு ஆசைப்படும் இளைஞர்கள், தகுந்த ஆலோசனைகள், ஆரோக்கிய உணவுகளுடன் இம் முயற்சியில் இறங்குவது உத்தமம்.