உங்க வேலையை மட்டும் பாருங்கள்: பொலிசிடம் கூறிய நபருக்கு கிடைத்த கூல் பதில்

மும்பை பொலிசிடம் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள், அறிவுரை வழங்க தேவையில்லை என்று கூறிய டுவிட்டர் பயன்பாட்டாளருக்கு மிகவும் கண்ணியத்தோடு மும்பை பொலிஸ் பதிலளித்துள்ளது.

தீபாவளி என்பது சந்தோஷங்களை பரிமாறிக்கொள்வதே தவிர, ஒரு வித பதட்டத்தையும், அச்சத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது கிடையாது என்ற கருத்தினை மும்பை பொலிசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

மேலும், பட்டாசு வெடிப்பதன் காரணமாக ஒலிக்கும் சத்தம் மற்றும் புகைமண்டலங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த புகைப்டத்தை வெளியிட்டனர்.

இதற்கு டுவிட்டர் பயன்பாட்டளரான சித்தார்த் என்பவர், சட்டம் ஒழுங்கினை பாதுகாப்பதே பொலிசின் கடமை. அதனை தவிர்த்து மக்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டியது அவர்களது கடமை இல்லை. எனவே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

சித்தார்த்தின் இந்த பதிலுக்கு, மும்பை பொலிசார் எவ்வித அதிருப்தியும் தெரிவிக்காமல் மிகவும் கண்ணித்தோடு, பட்டாசுகளை எரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இடமுள்ளது என பதில் அளித்துள்ளனர்.