4 மாத பெண் குழந்தையை காஸ் தீயில் எரித்த பெற்றோர்! பதற வைக்கும் பின்னனி காரணம்

பிரித்தானியாவில் தம்பதியினர் இறந்த 4 மாத பெண் குழந்தையை காஸ் தீயில் வைத்து எரித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

West Yorkshire, Heckmondwike பகுதியை சேர்ந்த 24 வயதான டேனியல் ஷியர்ட், 22 வயதான லூசி டாமென் தம்பதியே தங்களது 4 மாத பெண் குழந்தை Kayleigh Sheardயாவின் உடலை எரித்துள்ளனர்.

இருவரும் குழந்தை கொடுமை குற்றச்சாட்டை ஏற்ற நிலையில், ஷியர்ட்க்கு 6 ஆண்டுகளும், டாமெனுக்கு 4 ஆண்டு 6 மாத சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில், கடந்த 2013ம் ஆண்டு குறித்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை பல உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் குழந்தையை விரும்பாத தம்பதியினர் உதாசீனப்படுத்தி முறையான சிகிச்சை அளிக்க தவறியுள்ளனர்.

இந்நிலையில், குழந்தையின் உடலில் புதிய காயத்தைக் கண்ட மருத்துவர்கள், சமூக சேவகர்களை வரவழைத்துள்ளனர். இறுதியில் குறித்த காயங்கள் தற்செயலாக ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையை கவனித்து வந்த தந்தை, சமூக சேவகர்களை மறுத்தது மட்டுமின்றி மருத்துவ சிகிச்சையும் தவிர்த்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில், ஆதாரங்களை மறைக்க பெற்றோர் இருவரும் சேர்ந்து குழந்தையை காஸ் தீயில் வைத்து எரித்துள்ளனர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்த நடந்த விசாரணையில் இருவரும் குழந்தை கொடுமை செய்ததை ஏற்றுள்ளனர்.

எனினும், குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. இந்நிலையில், குற்றத்தை ஏற்ற பெற்றோருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.