பிக்பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஷாரிக் ஹாசன்
தமிழ் சினிமாவில் பென்சில் உட்பட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஷாரிக் ஹாசன்.
இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை தன்வசப்படுத்தினார்.
இவற்றையெல்லாம் விட ஷாரிக்கின் திருமணம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. ஏனெனின் இவர் திருமணம் செய்து கொண்ட பெண் மரியா ஷாரிக்கை விட மூன்று வயது மூத்தவர், அத்துடன் இவருக்கு 9 வயது மதிக்கதக்க பெண் பிள்ளையொருவரும் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் அனைவரும் ஒரு குடும்பமாக வசித்து வருகிறார்கள். இவர்களை சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
மகன் பிறந்தாச்சு
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஷாரிக் மகனுடன் எடுத்து கொண்ட முதல் படத்தை பகிர்ந்துள்ளார்.
மகன் பிறந்ததற்கு சின்னத்திரை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram