அஜித்தின் 64வது படத்தின் பட்ஜெட் மட்டுமே இத்தனை கோடியா?

நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை கடைபிடித்து வருபவர்.

இந்த வருட ஆரம்பத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியானது. இதில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது, இந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது என்றே கூறலாம்.

தற்போதும் அஜித் தனது கார் ரேஸில் தான் கவனம் செலுத்தி வருகிறார், இந்த வருட இறுதியில் அடுத்து பட வேலைகளில் இறங்குவார் என தெரிகிறது.

குட் பேட் அக்லி பட வெற்றியை தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தை பிரம்மாண்டமாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்து செய்தி வலம் வருகிறது.

அஜித்தின் 64வது படத்திற்காக அஜித் ரூ. 180 கோடி வரை சம்பளம் பெற உள்ளாராம்.

இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என்று கூறப்படுகிறது.