அஜித் படத்தை 5 முறை பார்த்தேன் ரகசியத்தை உடைத்த சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் சிம்பு கூறிய திரைப்படம் ‘தக் லைஃப்’.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன் திரிஷா நடனத்தில் ‘சுகர் பேபி’ என்ற 2-வது பாடல் வெளியானது.

இந்நிலையில், தக் லைப்’ படத்தின் புரமோசனில் நடிகர் சிம்பு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை 5 முறை பார்த்ததாக கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” இந்த காலத்தில் பிடித்த படத்தின் காட்சிகளை எளிதாக கட் செய்து பகிர்ந்து விடுகிறார்கள். அப்போதெல்லாம் அந்த வசதி கிடையாது.

அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் கடைசியாக வரும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ நாதஸ்வர போர்ஷனை காண்பதற்காகவே அந்த படத்தை 4 முதல் 5 முறை பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.