நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி பின் ஹீரோவாக களமிறங்கி தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சந்தானம்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் DD next level. இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார்.
நடிகை கீத்திகா டிவாரி, கவுதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
வசூல்
இந்த நிலையில் 8 நாட்களில் DD next level திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 13.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள குறைவான வசூலாகும்.