நம்முடைய கர்ம வினைகளை நீக்கி அதனால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கக்கூடிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார். இந்த உலகத்தையே கஷ்டத்தில் இருந்து காப்பாற்றி நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக இருந்தது தான் பிரதோஷ நாள். இந்த பிரதோஷ நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்களையும் நீக்கி நமக்கு நன்மைகளை வாரி வழங்குவார். அப்படிப்பட்ட பிரதோஷ நாளன்று எந்த பொருட்களை ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மாசி வளர்பிறை பிரதோஷம்
சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதுவது தான் திங்கட்கிழமையும் பிரதோஷ நாளும். திங்கட்கிழமை தோறும் சிவபெருமானை வழிபாடு செய்வதை விட பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு அதிக அளவில் பலன்கள் உண்டாகும். காரணம் என்னவென்றால் பிரதோஷ நேரத்தில் நடைபெறக்கூடிய அபிஷேகங்களில் அனைத்து விதமான தேவர்களும் கலந்து கொள்வார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் அந்த நேரத்தில் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் சிவபெருமானின் அருளோடு அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற முடியும் என்பதால் தான் பிரதோஷ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.
அதுவும் மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதோஷமானது செவ்வாய்க்கிழமையோடு மார்ச் மாதம் 11-ம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு எளிமையான இந்த இரண்டு பொருட்களை வாங்கி சிவபெருமானின் ஆலயத்திற்கு வந்தோம் என்றால் நாம் கேட்ட வரம் கிடைக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திரும் என்று கூறப்படுகிறது.
சிவபெருமான் அபிஷேக பிரியர் என்பதால் அவருக்கு அபிஷேகத்திற்காக திரவிய பொடியை நாம் வாங்கி தர வேண்டும். எத்தனையோ பொருட்களை நாம் வாங்கிக் கொடுத்தாலும் இந்த திரவிய பொடியை வாங்கித் தருவதன் மூலம் சிவபெருமான் மனமகிழ்ந்து நாம் கேட்ட வரத்தை தருவார் என்று கூறப்படுகிறது. அதோடு சிவபெருமான் ஆலயம் பிரகாசமாக இருப்பதற்காக ஆலயத்திற்கு தீபம் ஏற்றுவதற்காக எண்ணையும் திரியும் வாங்கி தர வேண்டும்.
எண்ணெய் வாங்கி தர இயலவில்லை என்றாலும் திரியை மட்டுமாவது வாங்கித் தர வேண்டும். பலரும் எண்ணெய் வாங்கி தானம் செய்வார்கள். ஆனால் திரியை வாங்கி தருவது என்பது அந்த அளவிற்கு யாரும் மேற்கொள்ள மாட்டார்கள். அப்படி பலரும் செய்யாத ஒரு தானமாக தான் இந்த திரிதானம் திகழ்கிறது. பஞ்சு திரியை வாங்கி சிவாலயத்திற்கு தீபம் ஏற்றுவதற்காக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் அந்த திரியினால் உருவான தீபம் எப்படி இருளை நீக்கி பிரகாசத்தை தருகிறதோ அதே போல் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டமும் நீங்கி இன்பம் உண்டாக்கும்.







