தற்போது இருக்கும் அவசர உலகில் உடற்பயிற்சி இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது கூட அன்றைய நாளுக்கு போதுமானதாக இருக்கும். மாறாக விறுவிறுப்பான நடை உடலை நன்கு இயக்கும்.
உடலுக்கு 9 வகையான நன்மைகளை பெற எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. எப்போது நடந்தாலும் கிடைக்கும், இருந்த போதிலும் சாப்பிட்ட பின்னர் நடப்பது இன்னும் சிறந்தது என கூறப்படுகிறது.
சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் முறையே காலை, மாலை, மதியம் என மூன்று நேரங்களிலும் நடந்தால் செரிமானம் மேம்படுகிறது.
ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் இருக்கும். அத்துடன் சாப்பிட்ட பின்னர் நடக்கும் ஒருவருக்கு வயிறு வீக்கம், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் வருவது குறைவாக இருக்கும்.
அந்த வகையில், வாக்கிங் மூலம் 9 வகையான பலன்களை பெற வேண்டும் எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நடைபயிற்சி செய்யும் ஒருவருக்கு கிடைக்கும் பலன்கள்
1. தினமும் சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்து வந்தால் உடலின் உயிரியல் கடிகாரத்தை நன்கு செயல்பட தூண்டும். தூக்க சுழற்சி மேம்படும். இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இது போன்று நடைபயிற்சி செய்யலாம்.
2. சாப்பிட்ட பின்னர் குறுநடை போடுவது உடல் முழுவதும் ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். இந்த நடைபயிற்சி ஆக்சிஜன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.
3. நடைபயிற்சி செய்யும் ஒருவருக்கு எப்போதும் செரிமான மண்டலம் மற்றும் இரைப்பை நன்றாக இயங்கும். இரைப்பையில் உள்ள உணவுகள் சிதைந்து உரிய நொதியங்களை ஈர்க்க உதவியாக இருக்கிறது. சிலர் முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வயிறு உப்புசம், செரிமான கோளாறு, வீக்கம் போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். அப்படியானவர்கள் இப்படியான பயிற்சிகளில் ஈடுபடலாம்.
4. சாப்பிட்ட பின்னர் குறுநடை போடுபவர்களுக்கு மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் மேம்படும். படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றல் மேம்படும் என்றும் அவர்களுக்கு இருக்கும் நினைவாற்றல் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
5. சாப்பிட்ட பின் நடப்பதால் அதிகமான கலோரிகளை இழக்க முடியும். மூன்று வேளையும் சாப்பிட்ட பின் நடப்பதால் உடல் எடையை விரைவில் குறையலாம். அதிக எடை பிரச்சினை இருந்தால் வாக்கிங் செய்வது சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. உணவில் உள்ள கொழுப்புக்கள் இதய சார்ந்த நோய்களை ஏற்படுத்தும். இதனால் பக்கவாதம், புற்றுநோய்கள் ஆகிய நோய்களும் வரலாம்.