“கார்டிகல் கண்புரை” எனப்படுவது ஒரு வகையான கண்புரையாகும்.
இது லென்ஸின் விளிம்புகளில் உருவாகி பின்னர் மையத்தை நோக்கி ஸ்போக் போன்ற முறையில் செல்லும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கார்டிகல் கண்புரை லென்ஸின் விளிம்புகளில் ஏற்படுவதால் அதனை கார்டிகல் கண்புரை என அழைக்கிறார்கள்.
கார்டிகல் கண்புரையின் நிலை மோசமடைந்து வருகின்றது என்பதால் கண்ணுக்குள் நுழையும் ஒளி சிதறி, மங்கலான பார்வையை தரும்.
கார்டிகல் பிரச்சினை முதுமைக் காலங்களில் அதிகமாக தாக்கும். கண்புரை இரண்டு வழிகளில் பரவும்.
1. மெதுவாக உருவாகி நீண்ட காலமாக பரவும்.
2. மிக வேகமாக பரவி, வேகமான தாக்கத்தை ஏற்படுத்தும்
கார்டிகல் கண்புரையில் இரண்டு வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
1. பின்புற கார்டிகல் கண்புரை
2. முன்புற கார்டிகல் கண்புரை
பின்புற கார்டிகல் கண்புரை
பின்புற கார்டிகல் கண்புரை என்பது லென்ஸ் காப்ஸ்யூலின் கீழ் இருக்கும் அடுக்கில் ஒளிபுகாத நிலையை குறிக்கிறது.
முன்புற கார்டிகல் கண்புரை
முன்புற கார்டிகல் கண்புரை என்பது லென்ஸ் காப்ஸ்யூலின் முன்புறத்தில் அல்லது அதன் உள்ளே ஏற்படுகிறது. இது பொதுவாக காலப்போக்கில் உருவாகாமல், தலை அல்லது கண் காயத்தால் ஏற்படுகிறது.
கார்டிகல் கண்புரைக்கான அறிகுறிகள்
1. வழக்கத்திற்கு மாறாக மங்கலான பார்வை இருக்கும். ஆரம்ப காலங்களில் மங்கலான பார்வை இருந்தால் அதனை சரிச் செய்து கொள்வது இலகு.
2. ஒளி மூலங்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு கண்கள் கடுமையான கூசும். இப்படியான நிலை வந்தால் உரிய மருத்துவரை நாட வேண்டும்.
3. எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியான நிறங்கள் காணப்படும். அதனை வேறுபடுத்திக் கூறுவதில் சிரமமாக இருக்கும். இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு இருக்கும். உதாரணமாக, நீல நிறத்தையும் அவர்கள் பச்சை என கூறுவார்கள்.
4. ஒரு பொருள் எவ்வளவு தூரம் வைக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானிப்பதில் சிரமமாக இருக்கும். சில சமயங்களில் குறித்த பொருள் தூரமாக இருந்தால் அது என்ன என்பது அடையாளம் காணுவதில் கூட சிக்கல்கள் ஏற்படலாம்.
5. பாதிக்கப்பட்ட கண்ணில் சாத்தியமான இரட்டை பார்வை – மோனோகுலர் டிப்ளோபியா
காரணங்கள்
1. இந்த பிரச்சினை வயது முதிர்வு காரணமாக ஏற்படலாம். வயதானவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்வது அவசியம்.
2. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவனக் குறைவு காரணமாக கண்ணை காயப்படுத்திக் கொள்வார்கள். இப்படியான சந்தரப்பங்களில் பார்வை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே முடிந்தவரை கண்ணை பாதுகாப்பது சிறந்தது.
3. உங்களுக்கு குடும்பத்தில் யாருக்காவது கண்புரை பிரச்சினை இருந்தாலும், அது பரம்பரை வழியாக அடுத்த தலைமுறைக்கு வரும். இது சிறு வயது குழந்தைகளுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
4. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற மோசமான நோய்களின் தாக்கங்கள் காரணமாகவும் இந்த நோய் ஏற்படலாம். இப்படியான வாழ்க்கை முறை நோய்கள் இருப்பவர்கள் அடிக்கடி மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
5. சிலர் எப்போதும் தொலைக்காட்சி மற்றும் கணனி போன்ற சாதனங்கள் மிக அருகாமையில் வைத்து பார்ப்பார்கள். அப்படி பார்க்கும் பொழுது கண்களில் பாதிப்பு ஏற்படலாம். எப்போதும் கிட்டப்பார்வை இருக்கக் கூடாது.
6. புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களை ஏகப்பட்ட நோய்கள் தாக்கும். அதில் கண்புரையும் ஒன்றாகும். தினமும் புகைக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்படலாம்.
கார்டிகல் கண்புரை தடுக்கும் வழிகள்
வெளியே செல்லும் போது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்காக கண்களுக்கு கண்ணாடிகள் அணியலாம்.
புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் முடிந்தவரை அதனை குறைத்து கொள்ளுங்கள். இந்த பழக்கம் நாள்ப்பட்ட நோய்களை உண்டு பண்ணும்.
முடிந்தவரை மாதத்திற்கு ஒருமுறையாவது கண்களை தவறாமல் பரிசோதிக்க வேண்டும். இப்படியான முன் ஏற்பாடுகள் காரணமாக இலகுவாக நோய்களை கண்டறியலாம்.
நீரிழிவு மற்றும் பிற வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகள்
இருப்பின் அதனை கட்டுக்குள் வைத்து கொள்ளவும்.
பரிசோதனை
1. கண் பரிசோதனை என்கிற போது “வாசிப்பு சோதனை” நிச்சயம் நடக்கும். நோயாளியை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து மாறுபட்ட அளவில் அமர வைத்து விட்டு எழுத்துக்களின் தொகுப்பை காட்டி அவர்களை வாசிக்க வைத்தல். இதன் மூலம் அவர்களின் பார்வை திறனை கண்டறியலாம்.
2. மருத்துவர் கண்ணின் வெவ்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு நுண்ணோக்கி போன்ற கருவியைப் பயன்படுத்துவார்கள். இதுவே கார்னியா, கருவிழி, மற்றும் கண்புரை உருவாகும் லென்ஸ்.
3. மருத்துவர் விழித்திரையை விரிவுபடுத்த நோயாளியின் கண்ணில் சொட்டு மருந்துகளை செலுத்துவார்கள். கண்கள் போதுமான அளவு விரிந்தவுடன், மருத்துவர் பரிசோதிப்பார். இது விழித்திரை கண்புரையுடன் ஏதேனும் அசாதாரணங்களைக் கண்டறிய உதவியாக இருக்கிறது.