பிரபல தொலைக்காட்சி சீரியலில் மிகவும் சிறப்பாக மக்களள் மத்தியில் ஒளிப்பரப்பாகி கொண்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகியதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிரபல டிவியில் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை ரித்திகா இதற்கான காரணத்தை கூறியுள்ளார். இவர் முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர் இதிலிருந்து எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் சீரியலில் ரீ என்ரி கொடுத்து மக்கழை மகிழ்வித்தார். இந்த சீரியலில் இவரின் அழகிற்கும் நடிப்பிற்கும் அமைதியான குணத்திற்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இது தவிர பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாட்டு பாடி, காமெடி செய்து ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக இருந்தார்.இந்த நிலையில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்பு, நடிகை ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகினார். அப்போது, அதற்கான காரணம் எதுவும் சொல்லவில்லை.தற்போது தான் இதற்கான காரணத்தை இவர் கூறியுள்ளார்.
அவர் கூறும் போது திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க வேண்டும் என்று தான் இருந்தேன், யாரும் என்னை தடுக்கவில்லை. ஆனால் எனக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் வந்தது, அதனால்தான், நான் நடிப்பை விட்டு விலகி இருந்தேன். குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிக்க தொடங்குவேன் என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்துள்ளது.