வானில் பயணித்த வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு!

காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

ஓமான் பிரஜை ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அலீம் சபி என்ற 35 வயதுடைய ஓமான் பிரஜையொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நுவரெலியாவிலிருந்து காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.