நடிகர் நாக சைத்தன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
அதனை தொடர்ந்து நாக சைத்தன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் நிச்சயதார்த்தத்தை உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் இணையத்தில் சமந்தா ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சமந்தா இதயம் நொறுங்கிய நிலையில் காணப்படுவதாக ரசிகர்கள் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் சமந்தா நடித்த திரைப்படங்களின் வீடியோ காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு நடிகர் நாக சைதன்யா செய்துள்ள செயல் சமந்தா ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. விவாகரத்திற்கு பின்னரும் கூட சமந்தாவுடனான தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்த நாக சைதன்யா நிச்சயம் முடிந்த கையோடு சமந்தாவுடன் இருந்த தனது புகைப்படங்களை நீக்கிவிட்டார்.
இருப்பினும் Mrs என்று சமந்தாவை குறிப்பிட்ட புகைப்படத்தை மாத்திரம் நீக்காமல் வைத்திருக்கின்றார். அதை பார்த்த சமந்தா ரசிகர்கள் இந்த புகைப்படத்தையும் நீக்குமாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் இருந்து சமந்தாவை Unfollow செய்து, அவருடனான எல்லா புகைப்படத்தையும் நீக்கிவிட்டு குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை மட்டும் ஏன் வைத்திருக்கிறீர்கள்? அதையும் நீக்கிவிடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் நிச்சயம் முடிந்த கையோடு இப்படி செய்யலாமா எனவும் பலர் கேள்சியெழுப்பி வருகின்றனர்.