கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர்..

பிரபல நடிகர்
பிரபலங்கள் குறித்து நல்ல செய்தி வந்தாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

ஆனால் அவர்களை பற்றி ஏதாவது தவறான செய்தி வந்தாலே போதும் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகிவிடுவார்கள். அப்படி தற்போது ஒரு நடிகர் பற்றிய பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் தர்ஷன் ஒரு கொலை வழக்கில் கைதாகி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

முழு வி

வரம்
பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன் மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

அவரது கொலை வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் தர்ஷனின் நெருங்கிய தோழிக்கு ரேணுகா சுவாமி அடிக்கடி குறுந்தகவல்கள் அனுப்பி வந்தது தெரிய வந்துள்ளது, இதன் காரணமாக தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கிறாராம்.

நடிகர் தர்ஷன் காட்டேரா, குருஷேத்ரா, கிராந்தி உள்ளிட்ட படங்கள் மூலம் கன்னட சினிமாவில் பிரபலமாகியுள்ளார்.