பிரேம்ஜி அமரனுக்கும், அவரது மனைவிக்கு இவ்வளவு வயது வித்தியாசமா?…

பிரேம்ஜி
கங்கை அமரன், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.

இவரது முதல் மகன் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியவர் தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங், அடுத்த அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜியும் தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருகிறார்.

திருமணம்
திருமண வயது வந்தும் பேச்சுலராக இருந்து வந்த பிரேம்ஜிக்கு அண்மையில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது.

திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரேம்ஜி மற்றும் இந்துவுக்கும் உள்ள வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி பிரேம்ஜிக்கு வயது இப்போது 45 வயது, இந்துவுக்கு 25 வயது தான் என கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வருகின்றன.