மீனாவை கலங்க வைத்த விஜயா முத்து செய்த தரமான சம்பவம்

சதி செய்த விஜயா
விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல் என்றால் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் தான் இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலில் மீனா சொந்தமாக பூ கட்டும் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய வீட்டிற்கு வெளியே கடை வைத்து கொடுத்தார் முத்து.

இதன்மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தன்னுடைய கணவருக்கு புதிதாக கார் வாங்கி கொடுத்தார் மீனா. இப்படியொரு சூழ்நிலையில், மீனா மீது ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விஜயா, அந்த பூ கடைசியை காலி செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளார்.

முத்து செய்த சம்பவம்
இந்த நிலையில், மீனாவின் பூ கடையை பற்றி புகார் அளித்து, அந்த கடையை காலி வைத்துவிட்டார் விஜயா. இதனால் கண்கலங்கி அழுகிறார் மீனா. இந்த சமயத்தில் மீனாவிற்கு புதிதாக டு வீலர் வண்டி ஒன்றை வாங்கி தருகிறார் முத்து.

சிலர் சதி செய்து மீனாவின் கடையை காலி செய்துவிட்டார்கள், இனிமேல் இந்த வண்டியிலேயே சென்று, எங்கு வேண்டுமானாலும் மீனா பூ விற்கலாம் என முத்து தனது மனைவி மீனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..