அரச ஊழியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!

பிரதேச செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர (Janaka Vakumpura) தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பதவிகளுக்கான கொடுப்பனவு
பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த, மேலதிக கொடுப்பனவுகளை இம்மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.