மீண்டும் தமிழகத்தில் தஞ்சம் கோரும் இலங்கையர்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்குபேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி மணல் திட்டில் தரையிறங்கிய இவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி போதைப்பொருட்களின் பயன்பாடு
பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த போதைப்பொருட்களின் பயன்பாடு காரணமாக தமது பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் தஞ்சமடைந்ததாக இவர்கள் தமிழக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.