மறைந்த தனது அக்காவின் புகைப்படத்தை வெளியிட்ட யுவன்

பவதாரிணி
தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மிகவும் ஒரு சோகமான விஷயத்தை எதிர்க்கொண்டது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தான், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சோகமாக இருந்தது.

அந்த சோகத்திலேயே புதுவருடத்தை வரவேற்ற சினிமா ரசிகர்களுக்கு ஜனவரி மாதம் வந்த சோகமான விஷயம் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இறப்பு.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இலங்கை சென்று ஆயூர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால் முழுமையான சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார்.

பிரபலத்தின் பதிவு
அவரது இறப்பு இளையராஜா குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறப்பில் பவதாரிணி பிறந்தநாள் வர வெங்கட் பிரபு அழகிய புகைப்படம் பதிவிட்டு வாழ்த்து கூறி இருந்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மறைந்த தனது அக்கா, மகளுடன் எடுத்த கியூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து அழகிய புகைப்படம் என பதிவு செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by U1 (@itsyuvan)