மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு

பொதுவாக வாழைப்பழம் என கூறும் போது “பழம்” பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.

இந்த வரிசையில் ஒன்று தான் கற்பூரவல்லி வாழைப்பழம். இந்த பழம் பார்ப்பதற்கு கையில் பிடிக்கும் அளவிற்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும், நாவிற்கு தேன் சுவையை கொடுக்கும்.

இதனை தினமும் காலையில் சாப்பிடுவதால் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், கற்பூரவள்ளி வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

கற்பூரவள்ளி வாழைப்பழம்
1. கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ , பி6 மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. அதோடு மக்னீசியம் பொட்டாசியம், நார்ச்சத்து இருக்கின்றன. இந்த சத்துக்கள் எலும்பு, தசைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

2. டயட் பிளானில் இருப்பவர்கள் இந்த பழத்தை தயக்கமின்றி எடுத்து கொள்ளலாம். ஏனெனின் கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் பொட்டாசியம், சோடியம் , நார்ச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. இதனால் பசி ஏற்படும் அளவு குறைவாக இருக்கும்.

3. சில நிகழ்வுகளில் சாப்பிட்டு முடித்த பின்னர் கற்பூரவள்ளி வாழைப்பழம் கொடுப்பார்கள். இதற்கான முக்கிய காரணம் இது செரிமானத்தை இலகுப்படுத்தி நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

4. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம் , மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் கற்பூரவள்ளி பழத்தில் அதிகமாகவே இருக்கின்றன.

5. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கற்பூரவள்ளி வாழைப்பழத்திற்கு அதிகமாக இருக்கின்றது. இதனால் தோலில் உண்டாகும் புண்கள், சொறி, சிரங்குகள் சீக்கிரம் குணமடையும்.

6. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் சக்தி கற்பூரவள்ளி வாழைப்பழத்திற்கு இருக்கின்றது.

7. மூளைக்கு தேவையான ஆற்றலை வழங்கி கவனச்சிதறல், தூக்கமின்மை பிரச்சனை ஆகிய பிரச்சினைகளிலிருந்து எம்மை காத்து கொள்ளும்.

8. வீட்டில் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு காலையில் இந்த வாழைப்பழத்தை சாப்பிடக் கொடுக்கலாம். ஏனெனின் கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் சோர்வு, கவலை உள்ளிட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.