ஹோட்டல் பிசினஸ் மூலம் லட்சத்தில் புரளும் நடிகை சிம்ரன்

சிம்ரன்
நடிகை சிம்ரன் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன் தற்போது ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார். கிழக்கு கடற்கரை சாலையும் கோட்கா பை சிம்ரன் எனும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த ஹோட்டல் காலை 11மணிக்கு துவங்கி இரவு 11மணி வரை செயல்படுகிறது. சரி இந்த ஹோட்டலில் மெனு கார்டு பற்றி பார்க்கலாம். எந்தெந்த உணவுகள் எவ்வளவு விலைகளில் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..

மெனு கார்டு
சிம்ரனின் இந்த ஹோட்டலில் இரண்டு பேர் அமர்ந்து சாப்பிட, டேபிளை புக் பண்ணினால் ரூ. 700 ஆகுமாம். மேலும் இந்த ஹோட்டலில் ஆம்லெட் விலை மட்டுமே ரூ. 300 இருந்து ஆரம்பம் என்கின்றனர்.

சாதாரணமான கார்லிக் பிரெட்டின் விலை 130 ஆகுமாம். பேபிகார்ன் ரூ. 280, சிக்கன் லாலிபாப் ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறுத்த நண்டு ரூ. 380 விற்கப்படுகிறது.

மேலும் அனைத்து விதமான சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ரூ. 1000 ஆகுமாம். அதே போல் அனைத்து அசைவ உணவுகள் சேர்ந்த தட்டின் விலை ரூ. 1500 என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிம்ரனின் இந்த ஹோட்டலில் சாதாரண ஐஸ்க்ரீம் விலை மட்டுமே ரூ. 150 இருந்து துவங்குகிறது. இவ்வளவு ஏன் சாதாரண தாளித்த பருப்பு விலை மட்டுமே ரூ. 210 என விற்பனை செய்யப்படுகிறது.

தலைசுற்ற வைக்கும் வகையில் சிம்ரனின் ஹோட்டல் மெனு கார்டு அமைந்திருந்தாலும், கடற்கரை சாலையில் இந்த ஹோட்டல் இருப்பதால் நன்றாகவே கல்லா கட்டி வருகிறது என கூறப்படுகிறது. இந்த ஹோட்டல் மூலமாக லட்சங்களில் சம்பாதித்து வருகிறாராம் சிம்ரன்.