ரகுல் ப்ரீத்துக்கு ரகசிய திருமணம்

ராகுல் ப்ரீத் சிங்
நடிகை ராகுல் ப்ரீத் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் ஹிந்தியில் ஒரு சில படங்கள் நடித்தாலும் அங்கு பெரிய அளவு ஜொலிக்கவில்லை.

தமிழில் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்துக்கு தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திருமணம்
ரகுல் பிரீத்துக்கு தற்போது 33 வயதாகும் நிலையில் எப்போது திருமணம் என்று தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது தனது காதலர் ஜக்கி பக்னாணி உடன் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ரகசிய திருமணம் செய்ய இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.

கோவாவில் நடக்கும் அந்த திருமணத்தில் மிக மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதனால் ஏற்பாடுகளையும் மிகவும் ரகசியமாக செய்து வருகிறாராம் ராகுல் ப்ரீத்.