பிரபல மருத்துவமனையில் அடிதடி!

மஹரகமையில் உள்ள அபேக்க்ஷா வைத்தியசாலையைச் சேர்ந்த ஒரு ஊழியர் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் நிர்வாக பிரிவு ஊழியர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளதாக மஹரகமை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்கியவர் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இருவருக்குமிடையே ஏற்பட்ட நிர்வாக விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.