விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய ரஜினிகாந்த்!!

அரசியல் வருகை
சமீபலமாகமாக விஜய் அரசியல் வருகை தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

கட்சி தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை யாருக்கும் ஆதரவில்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று அறிவித்து இருந்தார்.

மேலும் , திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

ரஜினி வாழ்த்து
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.