விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போக நெற்பயிர் செய்கைக்கான உரக் கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக இந்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேயருக்கு 15000 ரூபா
இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 15000 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மேலும் 450 மில்லியன் ரூபாவை இன்றைய தினம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.







