ஜெர்மனியில் யாழை சேர்ந்த தாய் திடீர் மரணம்!

ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாண சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது