பன்றி வெடியில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் பன்றி வெடியில் சிக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியில் இன்று (05.02.2024) இடம்பெற்றுள்ளது.

பன்றிக்காக வைக்கப்பட்ட வெடி

தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும் காட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில் சிக்கியே குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பழனி வடிவேல் எனும் நபரே உயிரிழந்துள்ளார்.