யாழ் வந்த கனடா குடும்பஸ்தரால் கர்ப்பமான மாணவி!

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 47 வயதான நபரால் யாழில் மாணவி ஒருவர் கருவுற்ற சம்பவம் ஒன்று தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணவரை விட்டுப் பிரிந்து வாழும் வங்கி ஒன்றின் பெண் உத்தியோகத்தரின் மகளே கனடா வாழ் நபரின் செயலால் பாதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வைத்தியசாலையில் அம்பலமான தகவல்
தாயின் உறவினரான குறித்த நபர் ச் கனடாவிலிருந்து வந்து மாணவியின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

தாய் வங்கிக்கு சென்ற நேரத்திலும் மாணவியுடன் வெளியில் சென்று வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மையில் ஆலய நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதேவேளை யாழில் சமூர்க சீர்கேடான சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் குறித்து அவதானத்துடன் செயல்படவேண்டும், என்பதுடன் பிள்ளைகளை அடுத்தவர்களுடன் விட்டுசெல்லும்போதும் யோசித்து செயல்படவேணடும்.