இலங்கை வந்து மோசமான செயலில் ஈடுபட்ட பிரித்தானிய பிரஜை கைது!

பெலியத்தை பகுதியில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பிரித்தானிய பிரஜை சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்து பெலியத்தையில் தங்கியிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் குஷ் போதைபொருள் தயாரிப்பதற்காக கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 அடி உயரமுடைய கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.