நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை 17 கோடி ருபாய் அளவுக்கு மிஷன் படம் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தபோது காயம் ஏற்பட்டு அருண் விஜய் மிகப்பெரிய வலியை கடந்த இரண்டு மாதங்களாக பொறுத்து கொண்டிருந்தாராம்.
பல இடங்களில் எலும்பு முறிவு..
மிஷன் சேப்டர் 1 படம் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து அருண் விஜய் இன்ஸ்டாவில் பாடிவிட்டு இருக்கிறார்.
“இந்த வெற்றி நான் கடந்த 2 மாதங்களாக அனுபவித்த வலியை மறக்க செய்துவிட்டது. ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் போது பல இடங்களில் எலும்பு முறிவு, மற்றும் ligament tear ஏற்பட்டது.”
“உங்கள் அன்பால் மீண்டும் பழைய நிலைக்கு வருவேன்” என குறிப்பிட்டு தான் வீட்டில் படுத்த படுக்கயாக இருந்த புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார் அருண் விஜய்.