இந்த அறிகுறிகள் இருந்தா அப்போ உங்க கல்லீரல் பாதிப்படைந்திருப்பது உறுதி

ஏனெனில், அவற்றைப் புறக்கணிப்பது கல்லீரல் பாதிப்பு அல்லது செயலிழப்பை ஏற்படுத்தும். அதனால் உயிராபத்து கூட ஏற்பட வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதை உடலில் ஏற்படும் சில மாற்றங்களின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் இது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்
கல்லீரல் செரிமானத்திற்கும் உதவும் உறுப்பாக காணப்படுவதனால் கல்லீரல் சேதமடைந்தால், பசியின்மையை முதற்கட்ட அறிகுறியாக ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகள் பசியின்மைக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும்.

உடலில் உள்ள கழிவுகளை அகற்ற கல்லீரல் உதவுகிறது. கல்லீரல் சேதமடைந்தால், தோலில் அரிப்பு உணர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

பொதுவாகவே கல்லீரல் சேதமடைய ஆரம்பித்துவிட்டால் கண்களின் வெள்ளை நிற பகுதி மஞ்சள் நிறமாக மாறுவதை அவதானிக்க முடியும்.

உடலில் பிலிரூபின் அதிகமாக இருப்பதனால் இந்த மாற்றம் ஏற்படகின்றது. கழிவுகளை அகற்ற உதவும் கல்லீரல் பாதிப்படைந்திருப்பதையே இது உணர்த்துகின்றது. கல்லீரல் வயிற்றின் மேல் வலது பகுதியில் அமைந்துள்ளது.

கல்லீரல் சேதமடைந்தால், வயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர முடியும் இது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான பிரதான அறிகுறியாக காணப்படுகின்றது. மேலும் உடலுக்கு ஆற்றல் உற்பத்தி உட்பட பல முக்கிய செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது.

ஆகவே கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடல் அடிக்கடி சோர்வடைவதை உணரக்கூடியதாக இருக்கும். இவ்வாறான அறிகுறிகளை உணரும் பட்சத்தில் இதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.